Tuesday, May 1, 2012

மே மாதம் - 123 வது கவிச்சோலையில் இசைக்கவி ரமணனின் சிறப்புரை

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், பெக் கியோ சமுக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழுவுடன் இணைந்து மாதந்தோறும் நடத்தும் கவிச்சோலை வரும் ஞாயிற்றுக்கிழமை  6.5.2012ல் நடைபெ உள்ளது. 

 பெக் கி்யோ சமுக மன்றத்தில் இரவு மணி 7.00க்கு தொடங்கும் கவிச்சோலை நிகழ்ச்சியில் இசைக்கவி ரமணன் அவர்கள் , “கவிதையும் கானமும் " எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றுவார் 

 இம்மாத போட்டிக்கவிதைத் தலைப்பு "இடைவெளிகள்". 

சிறந்த மூன்று கவிதைகள் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொன்றுக்கும் 30 வெள்ளி பரிசு வழங்கப்படும்.


அனுமதி இலவசம்! அனைவரும் வருக!!!

மார்ச் மாதம் - 122 வது கவிச்சோலையில் இராம. வயிரவன் சிற்றுரை

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், பெக் கியோ சமுக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழுவுடன் இணைந்து மாதந்தோறும் நடத்தும் கவிச்சோலை  சனிக்கிழமை  10.3.2012ல் நடைபெற்றது.

 பெக் கி்யோ சமுக மன்றத்தில் சனிக்கிழமை இரவு மணி 7.00க்குத் தொடங்கிய கவிச்சோலை நிகழ்ச்சியில் கவிஞரும் எழுத்தாளருமான திரு. இராம . வயிரவன் , சிறுகதை எழுதலாம் வாங்க" எனும் தலைப்பில் சிற்றுரை ஆற்றினார்.

 கவிதைத் தலைப்பு "திறவு கோல்களை ஏற்காத பூட்டுகள்". 
சிறந்த மூன்று கவிதைகள் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொன்றுக்கும் 30 வெள்ளி பரிசு வழங்கப்பட்டது.

பிப்ரவரி மாதம் - 121 வது கவிச்சோலையில் வா.மு.சே. திருவள்ளுவர் சிறப்புரை


சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், பெக் கியோ சமுக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழுவுடன் இணைந்து மாதந்தோறும் நடத்தும் கவிச்சோலை சனிக்கிழமை  4.2.2012ல் நடைபெற்றது.

 பெக் கி்யோ சமுக மன்றத்தில் சனிக்கிழமை இரவு மணி 7.00க்குத் தொடங்கிய கவிச்சோலை நிகழ்ச்சியில் தமிழகத்தின் முதுபெரும் கவிஞரான பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் அவர்களின் புதல்வரும் எழுத்தாளருமான திரு. வா.மு.சே. திருவள்ளுவர் "எனது வெளிநாட்டுப் பயணங்கள்" எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
 கவிதைத் தலைப்பு "வேதனையில் விளைந்த வெளிச்சம்".  சிறந்த மூன்று கவிதைகள் டேர்வு செய்யப்பட்டு ஒவ்வொன்றுக்கும் 30 வெள்ளி பரிசு வழங்கப்பட்டது.

Friday, January 6, 2012

கவிச்சோலையில் தமிழ் லெமூரியா ஆசிரியரின் சிறப்புரை




சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், பெக் கியோ சமுக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழுவுடன் இணைந்து‍ மாதந்தோறும் நடத்தும் கவிச்சோலை நாளை மறுநாள் ஞாயிற்று‍க்கிழமை நடைபெறவிருக்கிறது.

பெக் கி்யோ சமுக மன்றத்தில் 8-Jan-2012 ஞாயிறு‍ இரவு மணி 7.00க்குத் தொடங்கும் கவிச்சோலை நிகழ்ச்சியில் "தமிழ் லெமூரியா" இதழின் ஆசிரியர் திரு. குமணராசன் "புலம் பெயர் தமிழர்களின் மொழியும் இலக்கியமும்" எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றுவார்.

இம்மாதக் கவிதைத் தலைப்பு "தமிழா, தமிழா". இந்தத் தலைப்பில் கவிதை எழுதி வருமாறு‍ கவிஞர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சிறந்த மூன்று‍ கவிதை ஒவ்வொன்றுக்கும் 30 வெள்ளி பரிசு‍ வழங்கப்படும்.

வழக்கம்போல் வடித்த, பிடித்த, ரசித்த கவிதை அங்கமும் உண்டு.
கவிஞர்கள், இலக்கிய ஆர்வலர்கள், தமிழன்பர்கள் அனைவரும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்படி‍ கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அனுமதி இலவசம்.

Friday, December 9, 2011

119 வது கவிச்சோலை



Sunday, November 6, 2011

118 ஆவது கவிச்சோலையில் கவியரங்கம்

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகமும், பெக்கியோ சமூக மன்ற இந்தியர் நற்பணிச்செயற்குழுவும் மாதந்தோறும் இணைந்து படைக்கும் கவிச்சோலை ஞாயிற்றுக்கிழமை (6-11-2011) இரவு 6.30 மணிக்கு ஸ்ரீலயன் சித்தி விநாயகர் ஆலயக் கல்யாண மண்டபத்தில் நடைபெறும்.

பொற்கிழிக்கவிஞர் சோ.சோ.மீ. சுந்தரனார் தலைமையில்

" நாட்டுக்கு உழைத்திடுவோம் நாம்"

எனும் தலைப்பில் கவியரங்கம்.

மருத்துவர் - கவிஞர் மாதங்கி

வணிகர் - கவிஞர் வயிரவன்

கவிஞர் - நெப்போலியன்

ஆசிரியர் - கவிஞர் கோ. இளங்கோவன்

கலைஞர் - கவிஞர் கோவிந்தராசு

எழுத்தாளர் - அ. கி. வரதராசன்

போட்டிக் கவிதைத் தலைப்பு "பேராண்மை".


தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த மூன்று கவிதைகள் ஒவ்வொன்றுக்கும் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் வழங்கும் 30 வெள்ளி கிடைக்கும்.

அனுமதி இலவசம்...அனைவரும் வருக...

தொடர்புக்கு இராம. வயிரவன் 93860497, கோ. இளங்கோவன் 91012672.

Friday, September 2, 2011

117 வது கவிச்சோலை

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகமும், பெக்கியோ சமூக மன்ற இந்தியர் நற்பணிச்செயற்குழுவும் மாதந்தோறும் இணைந்து படைக்கும் கவிச்சோலை சனிக்கிழமை (3-9-2011) பெக்கியோ சமுக மன்றத்தில் இரவு 7.00 மணிக்கு நடைபெறும்.

" சிலம்பும் நாட்டுப்புறப் பாடல்களும்" எனும் தலைப்பில் தமிழாசிரியர், கவிஞர் கோவி மாசிலாமணி சிறப்புரை ஆற்றுவார்.

படித்த, பிடித்த, வடித்த கவிதை அங்கமும் உண்டு.

போட்டிக் கவிதைத் தலைப்பு " ஏமாறாதெ! ஏமாற்றாதே!! ".

தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த மூன்று கவிதைகள் ஒவ்வொன்றுக்கும் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் வழங்கும் 30 வெள்ளி கிடைக்கும்.

அனுமதி இலவசம்...அனைவரும் வருக...

தொடர்புக்கு இராம. வயிரவன் 93860497, கோ. இளங்கோவன் 91012672,