Sunday, December 30, 2012

130 வது கவிச்சோலையில் கவிஞர் கார்வண்ணன்



2012 டிசெம்பர் 1 ஆம் தேதி பெக் இயோ சமூக மன்றத்தில் நடந்த 130 ஆவது கவிச்சோலையில் கவிஞர் கார்வண்ணன் அவர்களின் சிறப்புரையும் தினமலரின் மூத்த செய்தியாளர் திரு. வெ. புருசோத்தமன் அவர்களின் சிலப்பதிகாரத் தொடர் சொற்பொழிவும் சிறப்பாக அமைந்தன.
·         கவிஞர்கள் ஒபாமா’ என்ற தலைப்புக்குப் போட்டிக்கவிதைகள் எழுதிவந்திருந்தார்கள். அவற்றில் மூவருக்கு 30 வெள்ளி ரொக்கம் பரிசு வழங்கப்பட்டது.

பரிசு பெற்ற 3 கவிஞர்கள்

1.      கவிஞர் காசாங்காடு அமிர்தலிங்கம்
2.      கவிஞர் கீதாஞ்சலி
3.      கவிஞர் ரமா

கவிச்சோலை மாலை 7:35 க்குத் துவங்கி 9:30க்கு நிறைவடைந்தது.

கவிச்சோலையில் சிலப்பதிகாரத் தொடர் சொற்பொழிவு ஆரம்பம்



2012 நவம்பர் 4 ஆம் தேதி,

பெக் இயோ சமூக மன்றத்தில் நடந்த 129 ஆவது கவிச்சோலையில் தினமலரின் மூத்த செய்தியாளர்
திரு. வெ. புருசோத்தமன் சிலப்பதிகாரத் தொடர் சொற்பொழிவை ஆரம்பித்து சிறப்பாக உரையாற்றினார்கள்.


சொற்பொழிவைக் கேட்க எழுத்தாளர் கழகத்தின் மதியுரைஞர் முனைவர் சுப. திண்ணப்பன், புரவலர் வள்ளல் ஜோதி மாணிக்க வாசகம் உள்பட பலரும் வந்திருந்தார்கள். 



 கவிஞர்கள் சிதறிய சதங்கைகள்’ என்ற தலைப்புக்குப் போட்டிக்கவிதைகள் எழுதி வந்திருந்தார்கள். அவற்றில் மூவருக்கு 30 வெள்ளி ரொக்கம் பரிசு வழங்கப்பட்டது.


பரிசு பெற்ற 3 கவிஞர்கள்

1.      கவிஞர் இனியதாசன்
2.      கவிஞர் அம்பை பாலசரஸ்வதி
     3.  கவிஞர் சத்தியமூர்த்தி


கவிச்சோலை மாலை 7:35 க்குத் துவங்கி 9:30க்கு நிறைவடைந்தது.

Thursday, October 4, 2012

கவிச்சோலையில் அம்பை பாலசரஸ்வதி

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகமும், பெக்கியோ சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவும்  மாதந்தோறும் இணைந்து படைக்கும்  கவிச்சோலை வரும் சனிககிழமை  (6-10-2012) பெக்கியோ சமுக மன்றத்தில் நடைபெறவிருக்கிறது,


பெக் கியோ சமூக மன்றத்தில் இரவு 7.00 மணிக்குத் தொடங்கும் கவிச்சோலை நிகழ்ச்ச்சியில் தமிழகத்தின் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி ஒன்றின் முன்னாள் முதல்வர் அம்பை பாலசரஸ்வதி கவிதைப் பூக்கள் எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றுவார்.


இம்மாதப் போட்டிக் கவிதையின் தலைப்பு "அண்ணல் காந்தி". இந்தத் தலைப்பில் கவிதைகள் எழுதி வருமாறு கவிஞர்கள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த மூன்று கவிதைகள் ஒவ்வொன்றுக்கும்  30 வெள்ளி பரிசு வழங்கப்படும்.
வழக்கம்போல் படித்த, ரசித்த, வடித்த கவிதை அங்கமும உண்டு,
அனுமதி இலவசம்...அனைவரும் வருக...

தொடர்புக்கு இராம. வயிரவன் 93860497

Friday, September 7, 2012

கவிச்சோலையில் ஐம்பெரும் காப்பியங்கள்


கவிச்சோலையில் ஐம்பெரும் காப்பியங்கள்
========================================

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகமும், பெக்கியோ சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவும் மாதந்தோறும் இணைந்து படைக்கும் கவிச்சோலை வரும் ஞாயிற்றுககிழமை, 9-9-2012 அன்று  பெக்கியோ சமுக மன்றத்தில் நடைபெறவிருக்கிறது,

பெக் கியோ சமூக மன்றத்தில் இரவு 7.00 மணிக்குத் தொடங்கும் கவிச்சோலை நிகழ்ச்ச்சியில் ஐம்பெரும் காப்பியங்கள் குறித்த சிறப்புரை ,இடம்பெறவிருக்கிறது. எழுத்தாளர் கழகத் தலைவர் திரு. நா. ஆண்டியப்பன் அச்சிறப்புரையை ஆற்றுவார்.

இம்மாதப் போட்டிக் கவிதையின் தலைப்பு "பூக்களைப் பறியுங்கள் ". இந்தத் தலைப்பில் கவிதைகள் எழுதி வருமாறு கவிஞர்கள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த மூன்று கவிதைகள் ஒவ்வொன்றுக்கும் சிங்கப்பூர்த் தமிழ்  எழுத்தாளர் கழகம் 30 வெள்ளி வழங்கு​ம்.

வழக்கம்போல் படித்த. சுவைத்த, ரசித்த கவிதை அங்கமும் இடம் பெறும்..

அனுமதி இலவசம்...அனைவரும் வருக...

தொடர்புக்கு இராம.வயிரவன் 93860497,

Thursday, September 6, 2012

கவியரசு கண்ணதாசன் பாட்டுத் திறன் போட்டி 2012


கவியரசு கண்ணதாசன்
பாட்டுத் திறன் போட்டி 2012
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆண்டுதோறும் நடத்தும் கவியரசு கண்ணதாசன் விழாவை ஒட்டி  பொது மக்களுக்கு இரண்டு பிரிவுகளாகப் பாட்டுத் திறன் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. 16 வயதிற்குக் கீ​ழ் உள்ளவர்களுக்கான தனிக் குரல் பிரிவு முன் அறிவித்தபடி வரும் ஞாயிற்றுக்கிழமை 9ஆம் தேதி நடைபெறும்.

ஆனால் 16 வயதிற்கு மேலுள்ளவர்களுக்கு இருகுரல் பிரிவு ரத்துசெய்யப்பட்டு அதுவும் தனிக்குரல் பிரிவாக மாற்றப்பட்டுள்ளது. இந்தப் போட்டியின் முதல் சுற்று 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்.

இரு நாள்களிலும் முதல் சுற்றுப் போட்டிகள் 182 சிசில் ஸ்ட்ரீட் # 04-10 டேப்பாக், சிங்கப்பூர் 069547 (தஞ்சோங் பகார் எம்.ஆர்.டி. நிலையத்திற்கு அருகில்) எனும் முகவரியில் உள்ள எழுத்தாளர் கழக அலுவலகத்தில் காலை 9.00 மணியிலிருந்து நடைபெறும்.

16 வயதிற்கு மேற்பட்டோருக்கான தனிக்குரல் போட்டியில் பங்கேற்க விரும்புவோர்  20.9.2012ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்வதற்கான படிவத்தை singaporetamilwriters.com இணையத் தளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். kannadasan_contest@singaporetamilwriters.com எனும் மின்னஞ்சல் மூலமும் பதிவு செய்யலாம்.

சிங்கப்பூரில் பணிபுரியும்/வசிக்கும் (அடையாள அட்டை அல்லது வேலை அனுமதிச் சீட்டு நகல் தேவை) யாரும் போட்டியில் பங்கேற்கலாம்.

பரிசுகள்
16 வயதிற்குக் கீழ்: முதல் மூன்று பரிசுகளுக்கும் ஊக்கப் பரிசுகளுக்கும் தகுதிக்கேற்றபடி சிறப்பான கேடயங்கள், கோப்பைகள் வழங்கப்பபடும்.

16 வயதிற்கு மேல்: முதல் பரிசு  $200  இரண்டாம் பரிசு  $100   மூன்றாம் பரிசு $75 மூன்று ஊக்கப் பரிசுகள் ஒவ்வொன்றும் $50. மேல் விவரங்களுக்கு திரு. இராம. வயிரவன் (93860497), திரு. சி. குணசேகரன் (96601051), திரு. கோ. இளங்கோவன் (91012672) ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம்.

Saturday, August 4, 2012

கவிச்சோலையில் பேராசிரியர் கவிஞர் சபா. அருணாசலம் கவிஞர் இரவி பாரதி சிறப்புரைகள்

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகமும், பெக்கியோ சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவும்மாதந்தோறும் இணைந்து படைக்கும் கவிச்சோலை இன்று சனிக்கிழமை  (4-8-2012) பெக்கியோ சமுக மன்றத்தில் நடைபெறவிருக்கிறது,

பெக் கியோ சமூக மன்றத்தில் இன்று இரவு 7.00 மணிக்குத் தொடங்கும் கவிச்சோலை நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த இருவர் சிறப்புரை ஆற்றவிருக்கின்றனர்.

தேவகோட்டை சேவுகன்-அண்ணாமலை கல்லூரி தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் கவிஞர்  சபா.அருணாசலம்பூக்களைப் பறியுங்கள்எனும் தலைப்பிலும் கவிஞர் இரவி பாரதி கண்ணதாசன் கவிதைகள்எனும் தலைப்பிலும் சிறப்புரை ஆற்றுவர்.

இம்மாதப் போட்டிக் கவிதையின் தலைப்பு "மூர்த்தி சிறிது ". இந்தத் தலைப்பில் கவிதைகள் எழுதி வருமாறு கவிஞர்கள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த மூன்று கவிதைகள் ஒவ்வொன்றுக்கும் சிங்கப்பூர்த் தமிழ்  எழுத்தாளர் கழகம் வழங்கும் 30 வெள்ளி கிடைக்கும்.

அனுமதி இலவசம்...அனைவரும் வருக...
தொடர்புக்கு இராம.வயிரவன் 93860497,