Monday, April 29, 2013

கவிச்சோலைக்குப் பதில் கதைக் களம்


சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகமும், பெக் கியோ சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவும்  மாதந்தோறும் இணைந்து படைக்கும்  கவிச்சோலைக்குப் பதில் இனி மாதந்தோறும் கதைக் களம் இடம்பெறும். முதலாவது கதைக் களம் அடுத்த மாதம்  4.5-2013 சனிக்கிழமை மாலையில்  பெக் கியோ சமுக மன்றத்தில் நடைபெறும்.

கதைக் களத்திற்கு ஒரு பக்கக் கதை அல்லது குட்டிக் கதைகள் எழுதி அனுப்ப வேண்டும். 200 முதல் 250 வார்த்தைகளுக்குள் கதை இருக்க வேண்டும். இந்த வார்த்தை எல்லைக்குள் இல்லாத கதைகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டா. கதைகள் எதைப் பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் சிங்கப்பூர்ச் சூழலில் அமைந்திருப்பது முக்கியம்.

கதைக் களத்திற்கு வரும் குட்டிக் கதைகளில் மூன்று சிறந்த கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு முறையே 50 வெள்ளி, 30 வெள்ளி, 20 வெள்ளி ஆகிய மூன்று ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும்

குட்டிக் கதைப் போட்டியுடன் சிறுகதைத் திறனாய்வுப் போட்டியும் இடம்பெறும். நீங்கள் விரும்பிய ஒரேயொரு சிறுகதையைத் தெரிவு செய்து அதை 200 வார்த்தைகளுக்கு மேல் போகாமல் விமர்சனம் செய்து அனுப்ப வேண்டும். திறனாய்வு செய்யப்படும் சிறுகதை உள்நாட்டு அல்லது வெளிநாட்டுச் சிறுகதையாக இருக்கலாம். இதில் கட்டுப்பாடு கிடையாது. ஆனால் ஒரேயொரு சிறுகதையை மட்டுமே விமர்சனம் செய்ய வேண்டும். ஒரு சிறுகதைத் தொகுப்பை அல்ல. வரும் விமர்சனங்களில் சிறந்தவையாக இரண்டு தேர்வு செய்யப்பட்டு முறையே 30 மற்றும் 20 வெள்ளி ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும். இரண்டு போட்டிகளுக்கும் ரொக்கப் பரிசுடன் புத்தகப் பரிசும் வழங்கப்படும்.

உங்கள் குட்டிக் கதைகளும் சிறுகதை விமர்சனங்களும் வரும் 30.4.2013ஆம் தேதிக்குள் எங்களுக்கு வந்து சேர வேண்டும். கவிச்சோலைக்கு வந்து கவிதைகளை எழுதித்தருவதுபோல் இதை நீங்கள் எழுத முடியாது. மேலும் அவற்றை வாசித்து பரிசுக்குரியவற்றைத் தெரிவு செய்ய அவகாசம் தேவை. அதனால் முன்கூட்டியே அனுப்புவது அவசியம்.

கதைகளையும் விமர்சனங்களையும் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், BLK 723 # 13-149, Yishun Street 71, Singapore 760723 எனும் முகவரிக்கோ aavanna19@gmail.com,  rvairamr@gmail.com  ஆகிய மின்னஞ்சல் முகவரிகளுக்கோ அனுப்பலாம்.

இந்தக் கதைக் களத்திற்கு யார் வேண்டுமானாலும் கதைகளையும் விமர்சனங்களையும் அனுப்பலாம். எந்தக் கட்டுப்பாடும் கிடையாது.

கதைக் களத்தில் வேறு சில அங்கங்ளும் உண்டு. அவை பற்றி பின்னர் அறிவிக்கப்படும்.

மேல் விவரங்களுக்கு எழுத்தாளர் கழகப் பொருளாளர் திரு. இராம. வயிரவனைத் (93860497) தொடர்பு கொள்ளலாம்.