Saturday, May 11, 2013

மே மாதக் கதைக் களத்தில் மூன்று கதைகளுக்கு ரொக்கப் பரிசு



சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகமும், பெக் கியோ சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவும்  மாதந்தோறும் இணைந்து படைக்கத் தொடங்கியிருக்கும் கதைக் களத்தின் முதலாவது நிகழ்வில் மூன்று குட்டிக் கதைகளுக்கும் இரண்டு சிறுகதைத் திறனாய்வுகளுக்கும்  ரொக்கபி பரிசு வழங்கப்பட்டுள்ளது.

திருமதி மலையரசி கலைச்செல்வம் எழுதிய கிலுகிலுப்பை கதைக்கு முதல் பரிசு (S$50): கிடைத்தது. மாணவர் திரு. அதியன் ஆறுமுகம் எழுதிய என்ன சொல்லப் போகிறாய் எனும் கதைக்கு இரண்டாம் பரிசு (S$30): வழங்கப்பட்டது.  மூன்றாம் பரிசு(S$20) ஹேமாவின்பிரிவு கதைக்குக் கிடைத்தது.

சிறுகதைத் திறனாய்வில் கமலாதேவி அரவிந்தனின் ‘ஒருநாள் ஒரு பொழுது கதையைத் திறனாய்வு செய்த திருமதி விமலா ரெட்டி முதல் பரிசசை (S$30) வென்றார்.:இரண்டாம் பரிசு: (S$20): க. ப. அறவாணனின் ‘விதைத்தால் விளையும் கதையைப் பற்றி எழுதிய திருமதி உஷாவுக்குக் கிடைத்தது.

சிங்கப்பூரின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவரான திரு. பொன் சுந்தரராசு ஜெயகாந்தன் சிறுகதைகள் பற்றியும் புதுவைப் பேராசிரியர் முனைவர் ந. இளங்கோ, புதுமைப்பித்தன் சிறுகதைகள் குறித்தும். சிறப்புரை ஆற்றினர்.

30க்கு மேற்பட்டவர்கள் முதலாவது கதைக் களத்தில் கலந்துகொண்டனர்.

இரண்டாவது கதைக் களம் அடுத்த மாதம்  1-6-2013 சனிக்கிழமை மாலையில்  பெக் கியோ சமுக மன்றத்தில் நடைபெறும்.

அடுத்தமாதக் கதையின் தொடக்கவரி: “அவர் ஏன் அப்படிச் சொன்னார் என்று தெரியவில்லை. அப்படிச்சொன்னது எனக்கு அதிர்ச்சியளித்தது....


இந்தத் தொடக்க வரிகளைக் கொண்டு கதைக் களத்திற்கு குட்டிக் கதை எழுதி அனுப்ப வேண்டும். 200 முதல் 250 வார்த்தைகளுக்குள் கதை இருக்க வேண்டும்.
வார்த்தை எல்லைக்குள் இல்லாத கதைகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டா. கதைகள் எதைப் பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் சிங்கப்பூர்ச் சூழலில் அமைந்திருப்பது முக்கியம்.

கதைக் களத்திற்கு வரும் குட்டிக் கதைகளில் மூன்று சிறந்த கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு முறையே 50 வெள்ளி, 30 வெள்ளி, 20 வெள்ளி ஆகிய மூன்று ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும்

குட்டிக் கதைப் போட்டியுடன் சிறுகதைத் திறனாய்வுப் போட்டியும் இடம்பெறும். நீங்கள் விரும்பிய ஒரேயொரு சிறுகதையைத் தெரிவு செய்து அதை 200  முதல் 250 வார்த்தைகளுக்கு மேல் போகாமல் விமர்சனம் செய்து அனுப்ப வேண்டும். திறனாய்வு செய்யப்படும் சிறுகதை உள்நாட்டு அல்லது வெளிநாட்டுச் சிறுகதையாக இருக்கலாம். இதில் கட்டுப்பாடு கிடையாது. ஆனால் ஒரேயொரு சிறுகதையை மட்டுமே விமர்சனம் செய்ய வேண்டும். ஒரு சிறுகதைத் தொகுப்பை அல்ல. வரும் விமர்சனங்களில் சிறந்தவையாக இரண்டு தேர்வு செய்யப்பட்டு முறையே 30 மற்றும் 20 வெள்ளி ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும். இரண்டு போட்டிகளுக்கும் ரொக்கப் பரிசுடன் புத்தகப் பரிசும் வழங்கப்படும்.

உங்கள் குட்டிக் கதைகளும் சிறுகதை விமர்சனங்களும் வரும் 25-05-2013 ஆம் தேதிக்குள் எங்களுக்கு வந்து சேர வேண்டும். அதற்குப் பிறகு வரும கதைகளும் திறனாய்வுகளும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டா.

கதைகளையும் விமர்சனங்களையும் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், BLK 723 # 13-149, Yishun Street 71, Singapore 760723 எனும் முகவரிக்கோ அல்லது aavanna19@gmail.com,  rvairamr@gmail.com  ஆகிய இரண்டு மின்னஞ்சல் முகவரிகளுக்கும் அனுப்ப வேண்டும்.

இந்தக் கதைக் களத்திற்கு யார் வேண்டுமானாலும் கதைகளையும் விமர்சனங்களையும் அனுப்பலாம். எந்தக் கட்டுப்பாடும் கிடையாது.

மேல் விவரங்களுக்கு எழுத்தாளர் கழகப் பொருளாளர் திரு. இராம. வயிரவனைத் (93860497) தொடர்பு கொள்ளலாம்.

Monday, April 29, 2013

கவிச்சோலைக்குப் பதில் கதைக் களம்


சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகமும், பெக் கியோ சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவும்  மாதந்தோறும் இணைந்து படைக்கும்  கவிச்சோலைக்குப் பதில் இனி மாதந்தோறும் கதைக் களம் இடம்பெறும். முதலாவது கதைக் களம் அடுத்த மாதம்  4.5-2013 சனிக்கிழமை மாலையில்  பெக் கியோ சமுக மன்றத்தில் நடைபெறும்.

கதைக் களத்திற்கு ஒரு பக்கக் கதை அல்லது குட்டிக் கதைகள் எழுதி அனுப்ப வேண்டும். 200 முதல் 250 வார்த்தைகளுக்குள் கதை இருக்க வேண்டும். இந்த வார்த்தை எல்லைக்குள் இல்லாத கதைகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டா. கதைகள் எதைப் பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் சிங்கப்பூர்ச் சூழலில் அமைந்திருப்பது முக்கியம்.

கதைக் களத்திற்கு வரும் குட்டிக் கதைகளில் மூன்று சிறந்த கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு முறையே 50 வெள்ளி, 30 வெள்ளி, 20 வெள்ளி ஆகிய மூன்று ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும்

குட்டிக் கதைப் போட்டியுடன் சிறுகதைத் திறனாய்வுப் போட்டியும் இடம்பெறும். நீங்கள் விரும்பிய ஒரேயொரு சிறுகதையைத் தெரிவு செய்து அதை 200 வார்த்தைகளுக்கு மேல் போகாமல் விமர்சனம் செய்து அனுப்ப வேண்டும். திறனாய்வு செய்யப்படும் சிறுகதை உள்நாட்டு அல்லது வெளிநாட்டுச் சிறுகதையாக இருக்கலாம். இதில் கட்டுப்பாடு கிடையாது. ஆனால் ஒரேயொரு சிறுகதையை மட்டுமே விமர்சனம் செய்ய வேண்டும். ஒரு சிறுகதைத் தொகுப்பை அல்ல. வரும் விமர்சனங்களில் சிறந்தவையாக இரண்டு தேர்வு செய்யப்பட்டு முறையே 30 மற்றும் 20 வெள்ளி ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும். இரண்டு போட்டிகளுக்கும் ரொக்கப் பரிசுடன் புத்தகப் பரிசும் வழங்கப்படும்.

உங்கள் குட்டிக் கதைகளும் சிறுகதை விமர்சனங்களும் வரும் 30.4.2013ஆம் தேதிக்குள் எங்களுக்கு வந்து சேர வேண்டும். கவிச்சோலைக்கு வந்து கவிதைகளை எழுதித்தருவதுபோல் இதை நீங்கள் எழுத முடியாது. மேலும் அவற்றை வாசித்து பரிசுக்குரியவற்றைத் தெரிவு செய்ய அவகாசம் தேவை. அதனால் முன்கூட்டியே அனுப்புவது அவசியம்.

கதைகளையும் விமர்சனங்களையும் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், BLK 723 # 13-149, Yishun Street 71, Singapore 760723 எனும் முகவரிக்கோ aavanna19@gmail.com,  rvairamr@gmail.com  ஆகிய மின்னஞ்சல் முகவரிகளுக்கோ அனுப்பலாம்.

இந்தக் கதைக் களத்திற்கு யார் வேண்டுமானாலும் கதைகளையும் விமர்சனங்களையும் அனுப்பலாம். எந்தக் கட்டுப்பாடும் கிடையாது.

கதைக் களத்தில் வேறு சில அங்கங்ளும் உண்டு. அவை பற்றி பின்னர் அறிவிக்கப்படும்.

மேல் விவரங்களுக்கு எழுத்தாளர் கழகப் பொருளாளர் திரு. இராம. வயிரவனைத் (93860497) தொடர்பு கொள்ளலாம்.

Wednesday, February 27, 2013

கவிச்சோலையில் பேராசிரியர் மு.பி. பாலசுப்பிரமணியன்


சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகமும், பெக்கியோ சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவும் மாதந்தோறும் இணைந்து படைக்கும் கவிச்சோலை  வரும் சனிக்கிழமை (2-3-2013) பெக்கியோ சமுக மன்றத்தில் நடைபெறவிருக்கிறது, இந்தச் கவிச்சோலையில் சென்னை பச்சையப்பன் கல்​லூரியின் முன்னாள் முதல்வரும் தமிழாலயம் இதழின்  ஆசிரியருமான முனைவர் மு.பி. பாலசுப்பிரமணியன் சிறப்புரை ஆற்றுவார். அ,வர் ,எழுதியுள்ள இலக்கிய முன்றில் எனும் ​நூல் பற்றி பேராசிரியர் முனைவர் சுப. திண்ணப்பன் உரையாற்றுவார.
 
கவிச்சோலைப் போட்டிக் கவிதையின் தலைப்பு "இலக்கியம்". இந்தத் தலைப்பில் கவிதைகள் எழுதி வருமாறு கவிஞர்கள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
 
சனிக்கிழமை மாலை 6.30 மணிக்குத் தொடங்கும் மார்ச் மாத கவிச்சோலை சிங்கப்பூர் தமிழ் இலக்கியக் களம். தமிழவேள் நற்பணி மன்றம் ஆகியவற்றுடன் ஆதரவுடன் நடைபெறுகிறது.
மொத்தம் $150 ரொக்கப் பரிசுகளும் புத்தகப் பரிசுகளும் வழங்கப்பட இருக்கின்றன.இந்தத் தொகையை பெயரை வெளியிட விரும்பாத தமிழன்பர் ஒருவர் ஓராண்டுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். திடீர் ​ஹைக்கூ கவிதைப் போட்டியும் இ,டம்பெறும்
 
 அனுமதி இலவசம்...அனைவரும் வருக...
தொடர்புக்கு இராம.வயிரவன் 93860497,

கவிச்சோலையில் “இலக்கிய முன்றில்” நூல் ஆய்வுரை



மார்ச் 2-ஆம் தேதி சனிக்கிழமை மாலை

சிங்கப்பூர் எழுத்தாளர் கழகம் நடத்தும் கவிச்சோலையில்

இலக்கிய முன்றில்நூல் ஆய்வுரை.


வரவேற்புரை : திரு சுப அருணாச்சலம், செயலாளர்

தலைமையுரை : திரு நா. ஆண்டியப்பன், தலைவர்

நன்றியுரை: திரு இராம. வைரவன், பொருளாளர்

சிங்கப்பூர் எழுத்தாளர் கழகம் மார்ச்சு 2-ஆம் நாள் மாலை 6:30 மணி அளவில் நடத்தும் மார்ச்சு மாதக் கவிச்சோலை நிகழ்ச்சியில் முனைவர் மு.பி.பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற இருக்கிறார்.

இந்த விழா கேம்ப்ரிட்ஜ் சாலையில் அமைந்திருக்கும் பெக்கியோ சமூக மன்றத்தில் நடைபெறும்.


அவ்விழாவில் முனைவர் மு பி பாலசுப்பிரமணியன் அவர்களின்இலக்கிய முன்றில்என்ற நூலை பேராசிரியர் மூத்த தமிழறிஞர் முனைவர் சுப திண்ணப்பன் அவர்கள் ஆய்வுரை நிகழ்த்தி அறிமுகப் படுத்துவார்.

கவிச்சோலையில் கலந்து கொள்ளும் கவிஞர்கள்இலக்கியம்என்ற தலைப்பில், தான் இயற்றிய கவிதைகளை வாசிப்பார்கள். பரிசு பெற்ற கவிதைகளுக்கு திரு மு.பி.பாலசுப்பிரமணியன் அவரகள் பரிசளித்து சிறப்புச் செய்வார்கள்.


கடந்த 2011-ஆம் ஆண்டு சிங்கப்பூர் எழுத்தாளர் கழகம் உலக எழுத்தாளர் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியது குறிப்பிடத்தக்கது.



இந்த விழா திரு இலியாஸ் அவர்கள் நடத்திவரும்செம்மொழிஇதழ்,  தழிழவேள் நற்பணி மன்றம், மற்றும் முனைவர் இரத்தின வேங்கடேசன் தலைமையில் இயங்கும் சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியக் களம் ஆகிய அமைப்புகளின் ஆதரவுடன் நடைபெறுகிறது.

Friday, February 1, 2013

புதிய வடிவத்தில் கவிச்சோலை - மொத்தம் $150 பரிசுகள்

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகமும்பெக்கியோ சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவும் மாதந்தோறும் இணைந்து படைக்கும் கவிச்சோலை புதிய வடிவத்தில் புதிய அங்கங்களுடன்  வரும் ஞாயிற்றுக்கிழமை (3-2-2013பெக்கியோ சமுக மன்றத்தில் நடைபெறவிருக்கிறது, இந்தச் கவிச்சோலையிலிருந்து மாதம் மொத்தம் $150 ரொக்கப் பரிசுகளும், புத்தகப் பரிசுகளும் வழங்கப்பட இருக்கின்றன.இந்தத் தொகையை பெயரை வெளியிட விரும்பாத தமிழன்பர் ஒருவர் ஓராண்டுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.

ஞாயிறு இரவு 7.00 மணிக்குத் தொடங்கும் கவிச்சோலையில் சில புதிய அங்கங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

கவிச்சோலைப் போட்டிக் கவிதையின் தலைப்பு "பாம்பு". சீனப் புத்தாண்டை ஒட்டி இந்தத் தலைப்பு கொடுக்கப்படுகிறது. அந்தத் தலைப்பில் கவிதைகள் எழுதி வருமாறு கவிஞர்கள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். பரிசுகள் எப்படி வழங்கப்படும் எத்தனை கவிதைகளுக்கு வழங்கப்படும் என்று நிகழ்ச்சியில் அறிவிக்கப்படும்.

அனுமதி இலவசம்...அனைவரும் வருக...
தொடர்புக்கு இராம.வயிரவன் 93860497,

Tuesday, January 22, 2013

புத்தரிசி - கவிஞர் சித. அருணாசலம் (பொங்கல் கவியரங்க கவிதை)

1
புத்தரிசி
இலக்கிய வேந்தர் - எங்களை
இயக்கிடும் ஏந்தல்
எடுத்தவை திறம்பட
முடித்திடும் ஆற்றல்.
தமிழ் எழுத்தாளர் கழகத்
தலைமைக்கு வணக்கம்.
கவிதையா* கட்டுரையா* தொகுப்பாய்வா* - அவை
அனைத்தும் தங்குமிடம்,
அருவியாய்ப்; பொங்குமிடம்
எங்கள் ரத்தினம்.
என்றும் தமிழுக்கு சுபதினம்.
சிரித்த முகமாய்
சிந்தனை வயமாய்
நிந்தனை அறியா மனமாய்
நிலை பெற்ற பண்பிற்குப்
பணிவான வணக்கம்.
சபைக்கு மட்டுமின்றி
சக கவிஞர்களுக்கும் வணக்கம்.
அரிசி போட இடமில்லா அரங்கிலே
அரிசி பற்றிப் பேச வந்திருக்கிறேன்.
2
விதை நெல் வீரியம் கொண்டு
விண்ணைத் தொட்டுவிடலாமென
இருமாந்து வளரும்.
தலைக் கனமும்,
தானியக் கனமும் பெரிதாக,
தொங்கிய தலையாய்
குனிந்த நிலையாய்
மண்ணில் தலை பதிய
மாசு நீங்கிப் பாடம் கற்கும்.
கற்றதனால் ஆன பலனதனால்
பக்குவப்பட்ட மனம்
பசியைப் போக்கப்
பரிசாகத் தந்தது தான்
இந்தப் புத்தரிசி.
உடலை வளைத்து
உழைக்கின்ற வர்க்கத்துக்கு
இது சத்தரிசி.
அரிசி..
தமிழனின் வாழ்வில்
கலாச்சாரத்தின் அடையாளம்.
கடின உழைப்பிற்குப் பரிகாரம்.
தானியங்களின் வரிசையில்
தகுதியான முதலிடம்.
உழுதுண்டு பயிர் செய்து
உய்வு பெற்றதெல்லாம்
அரிசியை வைத்துத் தான்.
3
நெல்லே கூலியாக
நீண்ட நாட்கள் வரை
நிறைவாகப் பெறப்பட்டது.
குவித்து வைத்து அரிசியைக்
கோபுரமாக்கிப் பார்ப்பதை
மங்களம் நிறைந்ததாய்
மக்கள் நினைத்தார்கள்.
அரிசி..
அகர வரிசையை
அறிவிற்குள் ஏற்றி வைக்கப்
பரப்பி வைக்கப்பட்டுப்
பலகையாகிறது.
பிஞ்சு விரல்கள்
கோலம் போட
எழுத்தறிவைப் புத்தியில்
ஏற்றி வைக்கிறது.
வயிற்றுக்கு உணவாவதுடன்
வாழ்க்கைப் பாடத்திற்கும்
வழியாகிறது அரிசி.
அரிசியில் கைவைத்துத் தான்,
அடுத்த பாடம் தொடரும்.
தானத்தில் சிறந்தது அன்னதானம்.
தலையே பிரதானம் ஆனாலும்
வயிறு நிறைந்தால் தான்
வழக்கத்தில் அனைத்தும் சீராகும் - அந்த
4
அடிப்படை தேவையைப்
படிப்படியாய்ப் பூர்த்தி செய்வது அரிசி.
பக்குவப் படுத்துவதும் அரிசி.
சோற்றைச் சேர்த்தால்
சத்தெல்லாம் கொழுப்பாகும்,
சுத்தமாய் நலம் கெடும்,
என்பது மருத்துவம்
அதற்காக ஒட்டுமொத்தமாய்
அரிசியைத் தள்ள முடியுமா?
அது இல்லாத உணவைத் தான்
உள்ளே தள்ள முடியுமா?
அரிசி சேராத உடம்பு
அலுப்பைச் சேர்த்துக் கொள்ளும்.
அரிசியுடன் உழைப்பு
ஆறு கட்;டு உடம்பைத்; தரும்.
உழவனின் வேர்வையும்
உப்புக் கரிக்கும் - அந்த
உன்னதத் தீர்த்தத்தால் தான்
உலகமே இயங்கும்.
உலகை இயக்குபவன்
உடலிலே சட்டையில்லை.
ஊருக்குள் உலை பொங்க வைப்பவன்,
உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கியதில்லை
ஆகாயம் அழுகாமல் போனதால்
அடிக்கடி அழுகின்ற நிலை உழவனுக்கு.
5
கை விரித்த காவிரியும்,
கண் திறக்கா ஆகாயமும்
உழவனின் நிலையை
உருப்பட விடவில்லை.
தண்ணீர் மட்டுமல்ல,
தாங்கி வரும் மணலும்
தட்டுப்படாமல் போனதால்
விதைக்கப்படும்
விளைச்சல் நிலங்களிலெல்லாம்
வீடுகள் முளைத்துக் கட்டடக்
காடுகளாகி விட்டன.
நதிக்கரைகளில் வளர்ந்தது
நாகரீகமெனப் படித்திருக்கிறேhம்.
நதிகளைத் தொலைத்துவிட்டு
நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறேhம்?
நிலைமை இப்படியே
நீடித்துக் கொண்டிருந்தால்,
விவசாயம் என்பதை
விளக்கப் படத்துடன் -நம்
பரம்பரையினர்
பாடப் புத்தகத்தைப்
பார்த்துத் தான் தெரிந்து
கொள்ள வேண்டியிருக்கும்.
மக்கள் தொகை ஒருபுறம்
மலையளவு உயர்ந்திருக்க
விளைச்சல் நிலங்களோ
6
எதிர்மறையாய்க் குறைகிறது.
புத்தரிசியைப் பொங்கலன்று
பார்க்கின்ற பரவசம்
மொத்தமாய்க் காணாமல்
முழுவதும் தொலைந்து விடுமோ – என்ற
அச்சம் தான் அதிகமாகிறது.
அப்புறம் அரிசி என்பதே
அரிதாகப் போய்விடும்.
அறுவடை முடிந்து,
அரிசியைப் பிரித்து,
இனியதாசனின் புதுப்பானைக்கு
இதோ புத்தரிசி.
மாதங்கியிடம்
மஞ்சளை வாங்கி
வளர்ந்து செழித்த
வைரவன் தரும் கரும்புடன்
இனிப்பான பொங்கலை
இளங்கோவனும்,
சத்தான வெண்பொங்கலை
சக்திக் கண்ணனும்,
விருந்தாய்ப் படைக்க
மனித நேயத்தின் அடையாளம்
மாட்டுப் பொங்கலுடன்
மகிழ்வுடன் கோவிந்தராசு முடிக்கட்டும்.
விருந்து பொங்கலில் மட்டுமல்ல.
7
விளைத்திடும் தமிழிலும் தான்.
-சித. அருணாசலம்.