Friday, December 3, 2010

டிசெம்பர் மாதக்கவிச்சோலை


கவிச்சோலை வரும் ஞாயிறு 5.12.2010 அன்று இரவு மணி 7.00க்கு நடைபெறும். எழுத்தாளர் கழகத் தலைவர் திரு. நா. ஆண்டியப்பன் "கலைஞரின் கவிதைகள்" எனும் தலைப்பில் உரையாற்றுவார்.


இம்மாதக் கவிதைத் தலைப்பு "காகிதக் கப்பல்கள்". சிறந்த மூன்று கவிதைகள் ஒவ்வொன்றும் $30 ரொக்கப் பரிசு உண்டு. அனைவரும் வருக. அனுமதி இலவசம்.

Friday, October 1, 2010

அக்டோபர் மாதக் கவிச்சோலை

வரும் ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் 3ஆம் தேதி இரவு மணி 7.00க்கு பெக் கியோ சமூக மன்றத்தில் வழக்கம்போல் கவிச் சோலை நடைபெறும்.

முகவை இராம் "பிள்ளைத்தமிழ்" என்கிற தலைப்பில் உரையாற்றுகிறார்.
இம்மாதக் கவிதைத் தலைப்பு "பகலில் தோன்றிய நிலவு".

கவிதையினை கீழ்காணும் முகவரிக்கு வரும் சனிக்கிழமைக்குள்ளாக (02-10-2010) அனுப்பிவைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்...

aavanna@yahoo.com, sathiyamozhi@yahoo.com


அனைவரும் வருக! அனுமதி இலவசம்!!

Wednesday, September 8, 2010

பட்டி மன்ற அழைப்பு


அன்புடையீர், வணக்கம்,

பிடோக் சமூக மன்றத்தில் வரும் ஞாயிறு 12.09.2010 மாலை மணி 6.30ககு நடைபெறும் பட்டி மன்றத்திRகான அழைப்பு இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. தங்கள் வருகையை
எதிர்பார்க்கிறோம்.

நன்றி.

அன்புடன்

நா. ஆண்டியப்பன்
தலைவர்
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்

Thursday, September 2, 2010

செப்டெம்பர் மாதக் கவிச்சோலை


வரும் ஞாயிற்றுக்கிழமை செப்டெம்பர் 5ஆம் தேதி இரவு மணி 7.00க்கு பெக் கியோ சமூக மன்றத்தில் வழக்கம்போல் கவிச் சோலை நடைபெறும்.

19 ஆண்டுகளாக "அணு" என்கிற அஞ்சல் அட்டை இதழை நடத்திவரும் சிவகங்கை எழுத்தாளர் என். முத்துக்கிருஷ்ணன் "சிற்றிதழ்கள் தமிழ் இலக்கியத்திற்கு எவ்வாறு பங்களிக்கின்றன" என்கிற தலைப்பில் உரையாற்றுகிறார்.

இம்மாதக் கவிதைத் தலைப்பு "மனம் ஒரு குரங்கு" என்பதாகும்.

அனைவரும் வருக! அனுமதி இலவசம்!!

Saturday, August 28, 2010

பிரபஞ்சனின் சிறுகதைப் பயிலரங்கு


வரும் 29.08.2010 ஞாயிற்றுக்கிழமை காலை மணி 10.00 முதல் 12.30 வரை விக்டோரியாசாலையில் உள்ள உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையத்தில் சிறுகதைப் பயிலரங்கு நடைபெறும்.

பயிலரங்கிற்குப் பிறகு மதிய உணவு வழங்கப்படும். கட்டணம் ஒருவருக்கு 20 வெள்ளி மட்டுமே. தனது படைப்புகளுக்குப் பல பரிசுகளையும் விருதுகளையும் வென்று தமிழகத்தின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராகப் பாராட்டுப் பெற்றுள்ள திரு பிரபஞ்சனின் இந்தச் சிறுகதைப் பயிலரங்கை வளர்ந்துவரும் சிங்கை எழுத்தாளர்கள் தவறவிட மாட்டார்கள் என நம்புகிறோம்.

பயிலரங்கில் பங்கேற்க 40 பேருக்கு மட்டுமே இடமுண்டு என்பதால் முதலில் வருவோருக்கு முதற் சலகை எனும் அடிப்படையில் பதிவு செய்யப்படும்.

பயிலரங்கில் பங்கேற்க விரும்புவோர் எழுத்தாளர் கழகத்தின் துணைச் செயலாளர் திரு. இராம. வயிரவன் (93860497) அல்லது பொருளாளர் திருமதி சித்ரா ரமேஷ் (97733186) ஆகியோருடன் தொடர்பு கொண்டு பதிவு செய்துகொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

பயிலரங்கில் பங்கேற்போருக்கு எழுத்தாளர் பிரபஞ்சன் கையெழுத்திட்ட சான்றிதழ் வழங்கப்படும்।


விரைந்து பதிவு செய்க. யோசித்துத் தாமதப்படுத்திப் பின்னர் வருந்துவதில் பயனில்லை. இத்தகைய சிறந்த எழுத்தாளர்கள் நடத்தும் பயிலரங்கில் பங்கேற்கும் வாய்ப்பு அடிக்கடி கிடைக்காது.

அன்புடன்
நா. ஆண்டியப்பன்
தலைவர்
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்.

Wednesday, August 25, 2010

ஆனந்த பவன் மு.கு. இராமச்சந்திரா நினைவு புத்தகப் பரிசு நிகழ்ச்சி


ஆனந்த பவன் மு.கு. இராமச்சந்திரா நினைவு புத்தகப் பரிசு நிகழ்ச்சி வரும் 28.8.2010 மாலை மணி 6.00க்கு
டெஸ்ஸன்ஸோன் சாலையில் உள்ள பொதுச் சேவை மன்றத்தில் (Civil Service Club-Near Khalsa Association) நடைபெறும்.

நாடாளுமன்ற துணை நாயகரும் தஞ்சோங் பகார் குழுத் தொகுதி
நாடாளுமன்ற உறுப்பினருமான குமாரி இந்திராணி ராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.

பரிசுக்குரிய புத்தகத்தைத் தேர்ந்தெடுத்த மூன்று
நடுவர்களான எழுத்தாளர்கள் பிரபஞ்சன் (தமிழ் நாடு), மு. அன்புச்செல்வன் (மலேசியா), திரு. பொன் சுந்தராராசு (சிங்கப்பூர்) ஆகியோரும் அதில் பங்கேற்கிறார்கள்.


அனைவரும் வருக! அனுமதி இலவசம்!!

Sunday, August 8, 2010

ஆனந்த பவன் மு.கு. இராமச்சந்திரா நினைவு புத்தகப் பரிசு நிகழ்ச்சி.

ஆனந்த பவன் மு.கு. இராமச்சந்திரா நினைவு புத்தகப் பரிசு நிகழ்ச்சி வரும் 28.8.2010 மாலை மணி 6.00க்கு
டெஸ்ஸன்ஸோன் சாலையில் உள்ள பொதுச் சேவை மன்றத்தில் (Civil Service Club-Near Khalsa Association) நடைபெறும்.

நாடாளுமன்ற துணை நாயகரும் தஞ்சோங் பகார் குழுத் தொகுதி
நாடாளுமன்ற உறுப்பினருமான குமாரி இந்திராணி ராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.

பரிசுக்குரிய புத்தகத்தைத் தேர்ந்தெடுத்த மூன்று
நடுவர்களான எழுத்தாளர்கள் பிரபஞ்சன் (தமிழ் நாடு), மு. அன்புச்செல்வன் (மலேசியா), திரு. பொன் சுந்தராராசு (சிங்கப்பூர்) ஆகியோரும் அதில் பங்கேற்கிறார்கள்.


அனைவரும் வருக! அனுமதி இலவசம்!!

Wednesday, August 4, 2010

ஆகஸ்ட் கவிச்சோலை!!!


வரும் சனிக்கிழமை ஆகஸ்ட் 7ஆம் தேதி இரவு மணி 7.00க்கு பெக் கியோ சமூக மன்றத்தில் வழக்கம்போல் கவிச் சோலை நடைபெறும்.

செம்மொழி மாநாட்டைப் பற்றி சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர்
நா. ஆண்டியப்பன் உரையாற்றுகிறார்.

இம்மாதக் கவிதைத் தலைப்பு "மூன்றாம் உலகில் இருந்து முதலாம் உலகு வரை" என்பதாகும். சிங்கப்பூரின் வளர்ச்சியைப் பற்றிய கவிதைகளை அனுப்ப வேண்டும்.

அனைவரும் வருக! அனுமதி இலவசம்!!

Sunday, July 25, 2010

பேராசிரியர் முனைவர் அய்க்கண் அவர்களுடன் கலந்துரையாடல்

அன்புடையீர், வணக்கம்.

தமிழ் நாட்டின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரும் திருப்பத்தூர் ஆறுமுகம் பிள்ளை
சீதையம்மாள் கல்லூரித் தமிழ்த் துறையின் முன்னாள் தலைவருமான பேராசிரியர் முனைவர்
அய்க்கண் குறுகியகால வருகை மேற்கொண்டு சிங்கப்பூர் வந்துள்ளார்.

அவருடன் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு
ஏற்பாடு செய்துள்ளது. வரும் திங்கட்கிழமை 26.07.2010 மாலை மணி 6.30க்கு விக்டோரியா
ஸ்ட்ரீட்டில் உள்ள உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையத்தில் சிற்றுண்டியுடன்
கலந்துரையாடல் நடைபெறும்.

தமிழக அரசு 16 சிறந்த சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து ஆங்கிலம் உள்ளிட்ட 22 மொழிகளில்
மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது. பேரறிஞர் அண்ணா, மூதறிஞர் ராஜாஜி, கலைஞர்
கருணாநிதி, புதுமைப்பித்தன், கு. அழகிரிசாமி, ஜெயகாந்தன், ஆர் சூடாமணி, சுஜாதா
முதலியோரின் கதைகளுடன் இவரது கதையும் அதில் இடம்பெற்றுள்ளது.

மலேசியாவில் 2005ல் உலகத தமிழ்மறை ஆராய்ச்சி மாநாடு நடைபெற்றபோது உலகத் தமிழ்
எழுத்தாளர்களிடையே நடைபெற்ற சிறுகதைப் போட்டியில் இவரது கதை முதல் பரிசு பெற்றது.

பாரிஸ் தமிழ்ச் சங்கம் 2007ல் பாரதியாரின் 125ஆம் ஆண்டு விழாவை ஒட்டி நடத்திய
அனைத்துலகச் சிறுகதைப் போட்டியில் முனைவர் அய்க்கண்ணின் சிறுகதை முதல் பரிசை
வென்றது.

உத்தரப் பிரதேச மாநில அரசு தமிழகம், கேரளம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய நான்கு மாநில

எழுத்தாளரிடையே நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றதும் இவரது கதைதான்.


அகில இந்திய வானொலி நிலையம் நடத்திய நாடகப் போட்டியில் முதல் பரிசு பெற்ற இவரது
நாடகம் 19 தேசிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வானொலியில் ஒலிபரப்பப்பட்டது.

தமிழக அரசின் முதற் பரிசை இவரது படைப்புகள் மூன்று முறை வென்றுள்ளன.

தினமணி கதிர் வரலாற்று நாவல் போட்டி, கல்கியின் சிறுதைப் போட்டி, கலைமகள்,
அமுதசுரபி குறுநாவல் போட்டி ஆகியவற்றில் முதல் பரிசு பெற்றுள்ளார்.

சாகித்திய அகாடெமி தமிழில் வெளிவந்த சிறந்த 30 கதைகளைத் தேர்ந்தெடுத்து
வெளியிட்டது. அவற்றில் இவரது கதையும் அடங்கும்.

Institute of Asian Studies நிறுவனம் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ள தமிழ் இலக்கியம்
பற்றிய கலைக் களஞ்சியத்தில் இவரைப் பற்றிய மதிப்பீட்டுக் கட்டுரை இடம்பெற்றுள்ளது.

தவத்திரு குன்றக்குடி அடிகளாரிடமிருந்து "நற்கதை நம்பி" எனும் விருதையும்,
ஸ்ரீஜெயேந்திரர் இலக்கியப் பரிசினையும் ராஜசர் அண்ணாமலை செட்டியார் பொற்கிழி
விருதையும் இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றமும் அழகப்பா பல்கலைக் கழகமும்

இணைந்து வழங்கிய "புதிய இலக்கியச் செல்வர்" பட்டத்தையும் மத்திய அமைச்சர் திரு. ப.
சிதம்பரம் அளித்த "எழுத்து வேந்தர்" எனும் பட்டத்தையும் வி.ஜி.பி. இலக்கியப்
பரிசினையும் இவர் வென்றுள்ளார்.

இவரது கதைகள் ஆங்கிலம், இந்தி, வங்காளி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஒரியா முதலிய

மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

இவருடைய புத்தகங்கள் சென்னை, மதுரை, கோவை, திருச்சி பல்கலைக் கழகங்களிலும்,
தன்னாட்சிக் கல்லூரிகளிலும் சிங்கப்பூர்ப் பள்ளிகளிலும் பாட நூல்களாக
வைக்கப்பெற்றுள்ளன.

தமிழக அரசின் பிளஸ்_டூ வகுப்புத் துணைப்பாட நூலில் இவருடைய கதைகள் பாடமாகச்
சேர்க்கப்பெற்றுள்ளன.

பல்கலைக்கழக மாணவர்கள் இவரது படைப்புகளை M.Phil, Ph.D. பட்டங்களுக்கு ஆய்வு
செய்துள்ளனர்.

சுமார் 1,000 சிறுகதைகள், நாவல்கள், நாடகங்களை எழுதியுள்ள இவரது படைப்புகள் 71
நூல்களாக வெளிவந்துள்ளன.

இத்தகைய சிறப்பு வாய்ந்த ஒருவரைச் சந்திக்கும் வாய்ப்பை நழுவவிடலாமா?

வரும் திங்கட்கிழமை மாலை உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையத்தில் சந்திப்போம்.

நன்றி.

அன்புடன்
நா. ஆண்டியப்பன்

Thursday, July 1, 2010

கவிச்சோலையில் முனைவர் மா.தியாகராசன்

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகமும் பெக் கியோ சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழுவும் இணைந்து நடத்தும் இம்மாதக் கவிச்சோலை சூலை 3, 2010 சனிக்கிழமை இரவு மணி 7.00க்கு பெக் கியோ சமூக மன்றத்தில் நடைபெறும்.

கவிச்சோலையில் முனைவர் மா.தியாகராசன் அவர்கள் “பேரறிஞர் அண்ணாவின் சிறுகதையில் மொழிநடை” என்கிற தலைப்பில் சிறப்புரை ஆற்றுகிறார்.

இம்மாதக் கவிதைப் போட்டிக்கான தலைப்பு "பயணங்கள் முடிவதில்லை". சிறந்த மூன்று கவிதைகளுக்குத் தலா முப்பது வெள்ளி ரொக்கப்பரிசும் உண்டு. அனைவரும் வருக! அனுமதி இலவசம்.

வழக்கம் போல் "படித்தது, பிடித்தது, ரசித்தது" அங்கம் இடம்பெறும்.
கவிதை ஆர்வலர்கள் அனைவரும் நிகழ்ச்சியில் பங்கேற்றுச் சிறப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

Thursday, March 4, 2010

கவிச்சோலை -101

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகமும் பெக் கியோ சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழுவும் இணைந்து நடத்தும் 101வது கவிச்சோலை வரும் 7,3,2010 ஞாயிற்றுக்கிழமை இரவு மணி 7.00க்கு பெக் கியோ சமூக மன்றத்தில் நடைபெறும். ஐக்கிய நாட்டு நிறுவனம் மார்ச் 8ஆம் தேதியை அனைத்துலக மகளிர் தினமாக அறிவித்துக் கொண்டாடி வருவதை முன்னிட்டு இம்மாதக் கவிதைப் போட்டிக்கான தலைப்பு "பெண்ணின்
பெருமை" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டைப் புலவர் அரங்க நெடுமாறன் அவர்கள் "பெண்பாற் புலவர்கள்" குறித்து சிறப்புரை ஆற்றுவார்.
வழக்கம் போல் "படித்தது, பிடித்தது, ரசித்தது" அங்கம் இடம்பெறும்.
கவிதை ஆர்வலர்கள் அனைவரும் நிகழ்ச்சியில் பங்கேற்றுச் சிறப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.
வாருங்கள் தோழர்களே கவிதை வாசிப்போம்! கவிதையை நேசிப்போம்!! கவிதையை சுவாசிப்போம்!!!

அன்புடன்
நா. ஆண்டியப்பன்

Friday, January 1, 2010

சொக்கட்டான் - கவிதை

சொக்கட்டான் - கவிதை
சொற்களை தாயமாக்கிவிட்டாய்
குரலிழந்த நான்
என் பங்கு நியாயத்தை
இறக்கமுடியாமல்
போனேன்
பழமெடுத்து
உன்
வெற்றியைப்
பறையறைகிறாய்
இதற்கு
என்னை
அழைத்திருக்கவே
வேண்டாம்
நீ மட்டுமே
நாள் முழுதும்
விருத்தம் எடுக்க

- மாதங்கி

நாளை சனிக்கிழமை சனவரி 2ஆம் தேதி மாலை 7 மணியளவில் இம்மாதக் கவிச்சோலை மலருகிறது

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

மதுரை மாவட்ட உதவி ஆட்சியாளராக இருந்து ஓய்வு பெற்றவரும் சிறந்த ஆன்மீகப் பற்றாளருமான திரு.கோட்டீஸ்வரன் அவர்கள் ‘தமிழும் திருவாசகமும்’ என்கிற தலைப்பில் சிறப்புரை ஆற்றுகிறார்.

இம்மாதக் கவிதைப்போட்டிக்கான தலைப்பு "மொழியால் இணைவோம்"


சிங்கப்பூர்க் கவிஞர் திரு। முருகடியான் அவர்களின் இலக்கண வகுப்பும் நடைபெறும்।

இடம்: பெக் கியோ சமூக மன்றம் 97 கேம்பிரிட்ஜ் சாலை (ஓவன் சாலையிலிருந்து பிரிகிறது), சிங்கப்பூர் 219751


அனைவரும் வருக !! அனுமதி இலவசம்!!!

அன்புடன்

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்