Thursday, September 2, 2010

செப்டெம்பர் மாதக் கவிச்சோலை


வரும் ஞாயிற்றுக்கிழமை செப்டெம்பர் 5ஆம் தேதி இரவு மணி 7.00க்கு பெக் கியோ சமூக மன்றத்தில் வழக்கம்போல் கவிச் சோலை நடைபெறும்.

19 ஆண்டுகளாக "அணு" என்கிற அஞ்சல் அட்டை இதழை நடத்திவரும் சிவகங்கை எழுத்தாளர் என். முத்துக்கிருஷ்ணன் "சிற்றிதழ்கள் தமிழ் இலக்கியத்திற்கு எவ்வாறு பங்களிக்கின்றன" என்கிற தலைப்பில் உரையாற்றுகிறார்.

இம்மாதக் கவிதைத் தலைப்பு "மனம் ஒரு குரங்கு" என்பதாகும்.

அனைவரும் வருக! அனுமதி இலவசம்!!

1 comment:

  1. மனம் ஒரு குரங்கு
    -----------------

    நிலையில்லா உலகில்
    கிளையில்லா மரத்தைத்தேடி
    இளைப்பாற நினைக்கும் மனம்
    தட்டுத் தடுமாறி
    தன்நிலை திசைமாறி-சிலநேரம்
    தற்கொலையிலும் போய் நிற்கும்

    நினைவுகளை சுமந்தபடி
    நீரோடையில் நீச்சலடிக்கும்-
    நினைவிழக்கும் வேளை வந்தால்
    நீச்சல் தெரிந்திருந்தும்
    நீருக்குள் மூழ்கியிறக்கும்

    எவரும் தொடா எல்லயைத் தொட
    எத்தனித்து -
    எட்டுத்திக்கும் தான்பறக்கும்
    எதுவும் முடியாது போக
    ஏறிய இடத்திலேயே வீழ்ந்திருக்கும்

    திசைகள் பல
    தேடித் தேடி திரிந்துவரும்
    தேடியது கிடைக்க வில்லையெனில்
    திகைத்துபோய் சோர்ந்துவிடும்

    தன்னாசையைப் போக்க
    தாவித் தாவி தான் குதிக்கும்
    தடுமாற்றம் கண்டு விட்டால்
    தடம்மாறிப் போய்விடும்

    குரங்கைவிட படுவேகம்
    மனித மனம் - குரங்கோடு
    மனிதனைச் இணைத்துச் சொன்னால்
    கடுஞ்சினம் கொள்ளும்
    குரங்கின் இனம்....

    அன்புடன் மலிக்கா.

    http://niroodai.blogspot.com

    ReplyDelete