Thursday, May 31, 2012

கவிச்சோலையில் மலேசியக் கவிஞர் முரசு நெடுமாறன் சிறப்புரை


கவிச்சோலையில் மலேசியக் கவிஞர் முரசு நெடுமாறன் சிறப்புரை

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், பெக் கியோ சமுக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழுவுடன் இணைந்து‍ மாதந்தோறும் நடத்தும் கவிச்சோலை வரும் சனிக்கிழமை 2.6.2012ல் நடைபெறவிருக்கிறது.

பெக் கி்யோ சமுக மன்றத்தில் சனிக்கிழமை இரவு மணி 7.00க்குத் தொடங்கும் கவிச்சோலை நிகழ்ச்சியில் மலேசியாவின் முன்னணிக் கவிஞர்களில் ஒருவரான கவிஞர் முரசு நெடுமாறன் சிறப்புரை ஆற்றுவார். மலேசிய. சிங்கப்பூர்க் கவிதைக் களஞ்சியம் எனும் 1,000 பக்கங்களுக்கு மேற்பட்ட அரிய தொகுப்பை சில ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட அவர், அடுத்து "மலேசிய, சிங்கப்பூர்க் கவிஞர்களின் வாழ்வும் பணியும்" எனும் மிகப் பெரிய நுாலை தொகுக்கும் அரிய பணியில் ஈடுபட்டுள்ளார். அப்பணி குறித்து விளக்கவும். சிங்கையின் ​மூத்த. இளம் கவிஞர்களைச் சந்தித்து அவர்களின் விவரங்களைத் திரட்டவும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள கவிஞர் முரசு நெடுமாறன் திட்டமிட்டுள்ளார். ஆகவே கவிஞர்கள் அனைவரும் வரும் சனிக்கிழமை கவிச் சோலையில் கலந்துகொண்டு அவரது தொகுப்பில் தங்கள் விவரங்கள் இடம்பெறுவதை உறுதி செய்துகொள்ளும்படி செய்ய வேண்டியது.
இம்மாதக் கவிதைத் தலைப்பு "இதோ. இதோ என் வீடு". இந்தத் தலைப்பில் கவிதை எழுதி வருமாறு‍ கவிஞர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சிறந்த மூன்று‍ கவிதை ஒவ்வொன்றுக்கும் 30 வெள்ளி பரிசு‍ வழங்கப்படும்.

வழக்கம்போல் வடித்த, பிடித்த, ரசித்த கவிதை அங்கமும் உண்டு.
கவிஞர்கள், இலக்கிய ஆர்வலர்கள், தமிழன்பர்கள் அனைவரும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்படி‍ கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அனுமதி இலவசம்.

Tuesday, May 1, 2012

மே மாதம் - 123 வது கவிச்சோலையில் இசைக்கவி ரமணனின் சிறப்புரை

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், பெக் கியோ சமுக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழுவுடன் இணைந்து மாதந்தோறும் நடத்தும் கவிச்சோலை வரும் ஞாயிற்றுக்கிழமை  6.5.2012ல் நடைபெ உள்ளது. 

 பெக் கி்யோ சமுக மன்றத்தில் இரவு மணி 7.00க்கு தொடங்கும் கவிச்சோலை நிகழ்ச்சியில் இசைக்கவி ரமணன் அவர்கள் , “கவிதையும் கானமும் " எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றுவார் 

 இம்மாத போட்டிக்கவிதைத் தலைப்பு "இடைவெளிகள்". 

சிறந்த மூன்று கவிதைகள் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொன்றுக்கும் 30 வெள்ளி பரிசு வழங்கப்படும்.


அனுமதி இலவசம்! அனைவரும் வருக!!!

மார்ச் மாதம் - 122 வது கவிச்சோலையில் இராம. வயிரவன் சிற்றுரை

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், பெக் கியோ சமுக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழுவுடன் இணைந்து மாதந்தோறும் நடத்தும் கவிச்சோலை  சனிக்கிழமை  10.3.2012ல் நடைபெற்றது.

 பெக் கி்யோ சமுக மன்றத்தில் சனிக்கிழமை இரவு மணி 7.00க்குத் தொடங்கிய கவிச்சோலை நிகழ்ச்சியில் கவிஞரும் எழுத்தாளருமான திரு. இராம . வயிரவன் , சிறுகதை எழுதலாம் வாங்க" எனும் தலைப்பில் சிற்றுரை ஆற்றினார்.

 கவிதைத் தலைப்பு "திறவு கோல்களை ஏற்காத பூட்டுகள்". 
சிறந்த மூன்று கவிதைகள் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொன்றுக்கும் 30 வெள்ளி பரிசு வழங்கப்பட்டது.

பிப்ரவரி மாதம் - 121 வது கவிச்சோலையில் வா.மு.சே. திருவள்ளுவர் சிறப்புரை


சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், பெக் கியோ சமுக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழுவுடன் இணைந்து மாதந்தோறும் நடத்தும் கவிச்சோலை சனிக்கிழமை  4.2.2012ல் நடைபெற்றது.

 பெக் கி்யோ சமுக மன்றத்தில் சனிக்கிழமை இரவு மணி 7.00க்குத் தொடங்கிய கவிச்சோலை நிகழ்ச்சியில் தமிழகத்தின் முதுபெரும் கவிஞரான பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் அவர்களின் புதல்வரும் எழுத்தாளருமான திரு. வா.மு.சே. திருவள்ளுவர் "எனது வெளிநாட்டுப் பயணங்கள்" எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
 கவிதைத் தலைப்பு "வேதனையில் விளைந்த வெளிச்சம்".  சிறந்த மூன்று கவிதைகள் டேர்வு செய்யப்பட்டு ஒவ்வொன்றுக்கும் 30 வெள்ளி பரிசு வழங்கப்பட்டது.