Friday, September 7, 2012

கவிச்சோலையில் ஐம்பெரும் காப்பியங்கள்


கவிச்சோலையில் ஐம்பெரும் காப்பியங்கள்
========================================

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகமும், பெக்கியோ சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவும் மாதந்தோறும் இணைந்து படைக்கும் கவிச்சோலை வரும் ஞாயிற்றுககிழமை, 9-9-2012 அன்று  பெக்கியோ சமுக மன்றத்தில் நடைபெறவிருக்கிறது,

பெக் கியோ சமூக மன்றத்தில் இரவு 7.00 மணிக்குத் தொடங்கும் கவிச்சோலை நிகழ்ச்ச்சியில் ஐம்பெரும் காப்பியங்கள் குறித்த சிறப்புரை ,இடம்பெறவிருக்கிறது. எழுத்தாளர் கழகத் தலைவர் திரு. நா. ஆண்டியப்பன் அச்சிறப்புரையை ஆற்றுவார்.

இம்மாதப் போட்டிக் கவிதையின் தலைப்பு "பூக்களைப் பறியுங்கள் ". இந்தத் தலைப்பில் கவிதைகள் எழுதி வருமாறு கவிஞர்கள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த மூன்று கவிதைகள் ஒவ்வொன்றுக்கும் சிங்கப்பூர்த் தமிழ்  எழுத்தாளர் கழகம் 30 வெள்ளி வழங்கு​ம்.

வழக்கம்போல் படித்த. சுவைத்த, ரசித்த கவிதை அங்கமும் இடம் பெறும்..

அனுமதி இலவசம்...அனைவரும் வருக...

தொடர்புக்கு இராம.வயிரவன் 93860497,

Thursday, September 6, 2012

கவியரசு கண்ணதாசன் பாட்டுத் திறன் போட்டி 2012


கவியரசு கண்ணதாசன்
பாட்டுத் திறன் போட்டி 2012
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆண்டுதோறும் நடத்தும் கவியரசு கண்ணதாசன் விழாவை ஒட்டி  பொது மக்களுக்கு இரண்டு பிரிவுகளாகப் பாட்டுத் திறன் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. 16 வயதிற்குக் கீ​ழ் உள்ளவர்களுக்கான தனிக் குரல் பிரிவு முன் அறிவித்தபடி வரும் ஞாயிற்றுக்கிழமை 9ஆம் தேதி நடைபெறும்.

ஆனால் 16 வயதிற்கு மேலுள்ளவர்களுக்கு இருகுரல் பிரிவு ரத்துசெய்யப்பட்டு அதுவும் தனிக்குரல் பிரிவாக மாற்றப்பட்டுள்ளது. இந்தப் போட்டியின் முதல் சுற்று 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்.

இரு நாள்களிலும் முதல் சுற்றுப் போட்டிகள் 182 சிசில் ஸ்ட்ரீட் # 04-10 டேப்பாக், சிங்கப்பூர் 069547 (தஞ்சோங் பகார் எம்.ஆர்.டி. நிலையத்திற்கு அருகில்) எனும் முகவரியில் உள்ள எழுத்தாளர் கழக அலுவலகத்தில் காலை 9.00 மணியிலிருந்து நடைபெறும்.

16 வயதிற்கு மேற்பட்டோருக்கான தனிக்குரல் போட்டியில் பங்கேற்க விரும்புவோர்  20.9.2012ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்வதற்கான படிவத்தை singaporetamilwriters.com இணையத் தளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். kannadasan_contest@singaporetamilwriters.com எனும் மின்னஞ்சல் மூலமும் பதிவு செய்யலாம்.

சிங்கப்பூரில் பணிபுரியும்/வசிக்கும் (அடையாள அட்டை அல்லது வேலை அனுமதிச் சீட்டு நகல் தேவை) யாரும் போட்டியில் பங்கேற்கலாம்.

பரிசுகள்
16 வயதிற்குக் கீழ்: முதல் மூன்று பரிசுகளுக்கும் ஊக்கப் பரிசுகளுக்கும் தகுதிக்கேற்றபடி சிறப்பான கேடயங்கள், கோப்பைகள் வழங்கப்பபடும்.

16 வயதிற்கு மேல்: முதல் பரிசு  $200  இரண்டாம் பரிசு  $100   மூன்றாம் பரிசு $75 மூன்று ஊக்கப் பரிசுகள் ஒவ்வொன்றும் $50. மேல் விவரங்களுக்கு திரு. இராம. வயிரவன் (93860497), திரு. சி. குணசேகரன் (96601051), திரு. கோ. இளங்கோவன் (91012672) ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம்.